மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

பிக்சல் மற்றும் திசையன் வரைகலை[pixel and vector based images]

 பிக்சல்
பிக்சல் என்பது  படத்தின் அடிப்படை கூறுகள்..இவை மிக சிறிய அளவில் இருக்கும்.பிக்சல் அனைத்தும் இருபரிமாண கட்ட அமைப்பில் சீரான புள்ளிகளை அல்லது சதுரங்களை கொண்டும் அமையபெற்றிருக்கும்.
picture elements =pixel
ஒரு படத்தின்   தெளிவும் அளவும் அதன் பிக்சல் எண்ணிக்கை பொறுத்தே அமையும் .புகைப்பட கருவிகள் ,scanner,video பதிவாகும் படங்கள் இந்த வகையே.

பிக்சல் படங்கள் சூம் செய்தால் பிக்சலின் உள்கட்டமைப்பு தெரியும்.

photoshop,ms paint போன்ற மென்பொருட்கள் இந்த வகையான படங்களை ஏடிட் செய்ய உதவும்.

 திசையன் வரைகலை [வெக்டர் ]:
வெக்டர் கிராபிக்ஸ் (திசையன் வரைகலை) என்பது கணினி வரைகலைகளில் பிம்பங்களைப் குறிப்பதற்காக கணித சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் புள்ளிகள், வரிகள், வளைவுகள் மற்றும் வடிவங்கள் அல்லது பல்கோணம் போன்ற வடிவியல்சார்ந்த முதன்மைப் பயன்பாடாகும். எனவே இவை எவ்வளவு சூம் செய்தாலும் தெளிவாக தெரியும்.
corel draw,adobe illustrator போன்ற மென்பொருட்கள் இந்த வகையான படங்களை ஏடிட் செய்ய உதவும்..
வெக்டர் அச்சுக்கு ஏற்றது என்றாலும்  பிக்சல் படங்களே நாம் பெரிதும் பயன்படுத்துகின்றோம்.இவற்றை தேர்ந்தெடுப்பது நமது உபயோகித்ததை பொறுத்தே உள்ளது.




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger