camera raw வில் உள்ள clarity slider (basic tab ) எனக்கு மிகவும் பிடித்தமானது.இந்த ஸ்லைடரை பயன்படுத்தி போட்டோவின் தெளிவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
போட்டோவை சும்மா நச்சுனு இருக்கு என்று சொல்ல வைக்கும் ஸ்லைடர் இது.
adobe போட்டோஷாப் அறிஞர்கள் இந்த ஸ்லைடரை punch என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
இந்த ஸ்லைடரை 25 முதல் 50 வரை மிக நுணுக்கமில்லாத போட்டோக்களுக்கு பயன்படுத்தலாம்.மிக தெளிவு தேவைப்படும் போட்டோக்களுக்கு 75 முதல் 80 வரை செட் செய்வது உகந்தது.
நீங்களே உங்கள் படங்களை எடிட் செய்து பாருங்கள் அப்பொழுது தெரியும்.
உண்மையில் நீங்கள் போட்டோவின் clarity ஐ குறைக்க விரும்பமாட்டீர்கள் !!
அனால் clarity ஸ்லைடரை குறைத்து ஒரு நல்ல வேலை செய்யலாம்..
clarity ஐ குறைப்பதன் மூலம் முக சருமத்தை பளபளப்பாக்கலாம்.
அனால் இந்த யுக்தி எப்பொழுதும் சரி வராது!!ஏனெனில் clarity ஐ குறைக்கும் போது முகத்தை தவிர மற்ற இடங்களும் பாதிக்கும்.எனவே இந்த யுக்தியை முகம் close shot போட்டோக்களுக்கு மட்டுமே..
0 comments:
Post a Comment