மூந்தைய பதிவில் camera raw வின் பயனர் இடைமுகத்தை பார்த்தோம்.இந்த பதிவில் camera raw வில் எடிட்டிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
எந்த போட்டோவையும் எடிட் செய்கையில் நான் முதலில் white balance ஐ தான் சரி செய்வேன்.white balance ஐ சரி செய்தால் பாதி பிரச்சன்னைக்கள் தீரும்.
உண்மையில் white balance problem என்றால் நாம் எடுக்கும் போட்டோக்களில் உண்மையான நிறங்கள் தெரியவில்லை என்று அர்த்தம்.நீங்கள் ஒரு கட்டிடத்தின் உள்ளே படம் எடுக்கையில் அது சற்று மஞ்சள் நிறமாக தெரியலாம்,அல்லது நிழலில் எடுத்தால் நீல நிறமாக தெரியலாம்.இந்த பிரச்சன்னைக்களை தீர்க்க camera raw வில் 3 வழிகள் உள்ளன.
உதாரணமாக கீழ்க்கண்ட படம் ஒரு தேவாலயத்தின் உள்ளே எடுக்கப்பட்டது.
இந்த படம் நீங்கள் தெளிவாக இருப்பதாக நினைக்கலாம் ,உண்மையில் இல்லை.
மேல் கூரையில் தொங்கும் விளக்குகளின் ஒளியால் கூரையின் நிறம் மஞ்சளாக தெரிகிறது.இந்த படத்தை camera raw வில் ஓபன் செய்யுங்கள்.
3 வழிகள் :
1--- >basic tab ல் உள்ள முதல் 2 ஸ்லைடர்களும் whitebalance சரி செய்ய பயன்படுத்தலாம்.பெரும்பாலும் temperature ஸ்லைடரே போதுமானது.
விளைவு:
2-- >white balance drop down மெனுவில் preset செட்டிங்க்ஸ் எதாவது பயன்படுத்தலாம் .இதனை white balance டூல் ஐ செலக்ட் செய்து போட்டோவினை ரைட் கிளிக் செய்தும் பெறலாம்.
3->white balance டூல் பயன்படுத்தி திறம்பட white balance ஐ சேரி செய்யலாம்.இந்த டூலை செலக்ட் செய்ய டூல்பாரில் 3 ஆவது டூலினை தேர்வு செய்யவும்.(shortcut key -I ).
பின்னர் போட்டோவில் இளம் சாம்பல் நிற இடத்தை கிளிக் செய்தால் நிகழும் இந்த மாயம்.
பெரும்பாலும் நான் drop down மெனுவில் உள்ள auto option ஐ பயன்படுத்துவேன்.
கேமரா ரா வில் exposure ஐ சரி செய்யவது எப்படி என்று சொல்கிறேன்.
0 comments:
Post a Comment