மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

நோக்கியா 1100-பகுதி 2

பகுதி 1-ல் கைபேசியின் வடிவத்தை மட்டும்தான் வரைந்தோம்.
இந்தப்பகுதியில்

 படி 1:
வழிகாட்டி கோடுகள்  நமக்கு இனிமேல் தேவையில்லை எனவே அதை மறைக்க ctrl + : கீக்களை அழுத்தவும்.
வழிகாட்டி கோடுகள் தெளிவாக தெரிவதற்காக கருப்பு பின்புல லேயரை உபயோகபடுத்தினோம் .அதை வேலை நிறமாக மாற்ற background  லேயரை தேர்வு செய்யவும்.பின் வரும் கீக்களை அழுத்தவும்.
D , X ,Alt + ← (backspace ).
பின் Base  லேயரை தேர்வு செய்து,opacity -ஐ 100% ஆக உயர்த்தவும்..
லேயரின் நிரப்பு நிறத்தை #434247 நிறமாக மாற்றவும்.பிறகு Base லேயருக்கு பின்வரும் லேயர் எப்பிக்ட்ஸை செட் செய்யவும்.
Inner  shadow :


bevel  and  emboss :

 Pattern Overlay:
சற்று கவனமாக செய்யவும்

 இரண்டாவது pattern -ஐ தேர்வு செய்யவும்.நமது Base  லேயர் தற்போது இப்படித்தான் தோன்றும்,உங்களின் லேயர் இப்படி தெரியவில்லை என்றால் மேல உள்ள படிகளை சரி பார்க்கவும்.
 படி 2:
Base  லேயரை duplicate  செய்யவும்.பின் லேயரின் பெயரை "3d effect " என மாற்றவும்.
லேயர் எப்பிக்ட்ஸை அழிக்கவும்.3d  effect  லேயரின் vector மஸ்க் -ஐ தேர்வு செய்து.
CTRL +T  அழுத்தி transform -ஐ பின் வருமாறு செய்ய வேண்டும்.transform -ஐ உறுதி செய்ய enter  கீயை அழுத்தவும்.

நமது கைபேசி சற்று வடிவம் பெற்றுருப்பதை காணலாம்.
படி 3:
பின் 3d  effect  லேயருக்கு புதிய எப்பிக்ட்ஸை பின்வருமாறு செட் செய்யலாம் .
outer  glow :
 Color  overlay :

Pattern  overlay :
நம் முன்பு பயன்படுத்திய அதே pattern-ஐ இபொழுது தேர்வு செய்யவும்
நமக்கு தேவையான gradient -ஐ பின்வருமாறு தயார் செய்து பயன்படுத்தவேண்டும்.

சற்று மேம்படுத்தப்பட தோற்றம் கிடைக்கும்.
 படி 4:
1. 3d effect  லேயருக்கு mask  ஒன்றை செய்யுங்கள்.
2. D  கீயை அழுத்தவும் ,Gradient  டூலை  எடுக்கவும் ,Reflected  gradient -ஐ கிளிக் செய்யவும்.
3.முதல் gradient -ஐ தேர்வு செய்யவும்.

படி 5:
பின்வருமாறு  gradient cursor -ஐ A  புள்ளியிலிருந்து B  புள்ளி வரை shift  கீயை அழுத்திக்கொண்டு இழுக்கவும்.


 விளைவு mask-ஐ பாருங்கள் 
,

படி 6:
Shape டூலில்  rounded  rectangle-ஐ கிளிக் செய்யவும், Radius -7px 
மறக்காமல் ஷேப் லேயர் செலக்டாகி உள்ளதா என சரி பார்க்கவும்.
பிறகு பின்வரும் படத்தைப்போல் வரையவேண்டும்.
லேயர் எபக்ட்ஸ் ஏதேனும் வந்தால் படி 2ன் ஆரம்பத்தில் கூறியபடி அழிக்கவும்.

துல்லியமான அளவையும்(scale) நிலையையும் (position) அடைய ctrl +T ,பின்வரும் அளவுகளை உள்ளிடவும். 
transform -ஐ உறுதி செய்ய enter  கீயை அழுத்தவும்.

 கைபேசியில் இந்த ரப்பர் துண்டு வளைவாக இருக்கும். மேலும் மேல் பக்கம் அகலமாகவும் கீழ்ப்பக்கம் குறுகலாகவும் இருக்கும்.
எனவே மீண்டும் ctrl +T ,பின் நமது புதிய லேயரை வலது  கிளிக் (right click ) செய்து warp  தேர்ந்து எடுக்கவும்.
பிறகு arc செலக்ட் செய்து bend -14% மதிப்பை உள்ளிடவும்.

 மிகவும் அகலமான வடிவம் கிடைக்கும்,அதை சரி செய்ய மீண்டும் ctrl +T 
Alt அழுத்திக்கொண்டே பின்வருமாறு அகலத்தை குறைக்கவும் 

இந்த லேயரை "earpiece" என்று பெயர் மாற்றவும்.
விளைவு 
படி 7:
லேயரின் நிறத்தை #cccccc என்றகவும்.
பின்வரும் லேயர் எப்பிக்ட்ஸை earpiece  லேயருக்கு செட் செய்யவும்.விளைவு 
படி 8 :
ரப்பர் துண்டில் ஸ்பீக்கருக்கு துளைகளை உருவாக்க பின்வருமாறு இரு புதிய லேயர்களை வரைய வேண்டும்.(பச்சை மற்றும் கருப்பு )

நான்  shape லேயர் முறையில் வரைந்துள்ளேன் ,நீங்கள் எந்த முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இரண்டு லேயர்களையும் தனி தனியே  பின்வருமாறு Transfrom  செய்ய வேண்டும்.

ctrl +T ,-> வலது கிளிக் (right click  )->warp ->arc  bend -15.

பின் பச்சை லேயருக்கு பின் வரும் effects -ஐ செட் செய்யவும்.


கருப்பு லேயரின் opacity -ஐ 70% ஆகா குறைக்கவும்.

கருப்பு மாறும் பச்சை லேயர்களை சரியான இடத்தில் வைக்கவும்.  
மேலே உள்ள லோகோவை பயன்படுத்துங்கள்.
நோக்கியா லோகோவை சரியான அளவில் இடத்தில வைக்கவும்.
பின் earpiece ,பச்சை,கருப்பு ,நோக்கியா லோகோ லேயர்களை குரூப் செய்ய ctrl +G  அழுத்தவும்.
குரூப்புக்கு ear cover  என்று பெயரிடவும்.
விளைவு மறக்காமல்  psd பைலாக save  செய்யவும்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
அடுத்த பகுதியில் தொடர்வோம்.
நன்றி,
அருண்.

நோக்கியா 1100-பகுதி 1 வடிவம்

இந்த இடுகையில் நாம்  நோக்கியா  1100 கைபேசியை முற்றிலும்  போட்டோஷாப்பில் வரைய போகிறோம்.

இறுதி விளைவு:


நிலை: இடைநிலை
தெரிந்திருக்க வேண்டியவை :
  1. ஷேப் லேயர்ஸ் (shape layers)
  2. பேனா டூல் (pen tool)
  3. லேயர் ஸ்டைலஸ் (layer styles)
படி 1:
போட்டோஷோபில் புதிய டாக்குமெண்டை  திறக்கவும்.
600px  X  750px ,72dpi

படி 2:
எந்த கைபேசிகும் அதன் வளைவுகளும் அளவுகளுமே  தனிப்பட்ட வடிவத்தையும் தோற்றத்தையும் தரும்.
எனவே நாம் சில வழிகாட்டு கோடுகளை (guide lines) உபயோகிக்கபோகிறோம்.மேற்கொண்ட படியை 158,166,175,300 px  ஆகிய மதிப்புக்களுக்கு "vertical" -ஐ  தேர்வு செய்து "Ok" கிளிக் செய்யவும்.

நமது டாக்குமெண்டில் தற்பொழுது 4 வழிகாட்டி கோடுகள்  தெரிவதை காணலாம்.
பிறகு அதே முறையை பயன்படுத்தி 43,69,243,406,674,708  ஆகிய மதிப்புக்களுக்கு "horizontal "-ஐ தேர்வு செய்து "ok" கிளிக் செய்யவும்.


உங்களுக்கு நீல நிறக்கோடுகள் தெளிவாக  தெரிவதற்காக  கருப்பு நிற பின்புலத்தில் காட்டியுள்ளேன்.

இந்த கோடுகளை கொண்டு நாமக்கு என பயன்?
இந்த கோடுகள் தான் நமக்கு கைபேசியின் சரியான வடிவத்தை வரைய உதவும்.

படி 3:
view மெனுவில் snap மற்றும் lock guides -ஐ டிக் செய்யவும்.
pen  டூலை தேர்வு செய்து, shape லேயர் ஐகான்-ஐ கிளிக் செய்யவும்.

இந்த படத்தை பாருங்கள்
நமது வழிகாட்டி கோடுகளில் முக்கியப்புள்ளிகளை பச்சையாக காட்டியுள்ளேன்.

இந்த புள்ளிக்களை pen டூல்க்கொண்டு மேலிருந்து கீழாக இணைக்கவும்.
பிறகு அந்த லேயரின் opacity -ஐ 0% ஆகக்குறைக்கவும்.படி 4:
மேல் வளைவுகளை உருவாக்க, pen டூலை  தேர்வு செய்யவும்.
பிறகு ctrl கீயை அழுத்திக்கொண்டு நாம் வரைந்த path -ஐ தேர்வு செய்யவும்.
ஒரு புதிய anchor  பாய்ண்டை உருவாக்கி அதை சற்று மேல உயர்த்தி வளைவை உருவாக்க வேண்டும்.


இதே  முறையை பயணப்படுத்தி கீழ் வளைவையும் செய்ய வேண்டும்.
இறுதியில் நமக்கு பின்வரும் தோற்றத்தில்  path -ஐ வரைந்திருபோம்.
ctrl + : அழுத்தி வரைக்கோடுகளை மறைக்கலாம்.


பின் நடுவளைவை ஏற்படுத்தவும்.நாம் கைபேசியின் சரி பாதி வடிவத்தை வரைந்து விட்டோம்.
ctrl + : அழுத்தி வரைக்கோடுகளை மறைக்கலாம்.படி 5:
path selection டூலை கிளிக் செய்து,பிறகு நாம் வரைந்த path -ஐ கிளிக் செய்தால் அனைத்து anchor  பாயண்ட்களும் select ஆகிவிடும்.
ctrl + c ,ctrl + v  -செய்தால் நாம் வரைந்த path -ன் பிரதி தயாராகிவிடும்,
குறிப்பு :பிரதி நாம் வரைந்த path -ன் மேலிருப்பதால் நமக்கு வித்தியாசம் தெரியாது,

பின் ctrl +T அழுத்தி,மத்தியப்புள்ளியை வலதோரம் நகர்த்தவும்,பின் வலது கிளிக் (right  கிளிக் ) செய்து Flip Horizontal -ஐ தேர்வு செய்யவும்.

enter கிளிக் செய்து  transform -ஐ உறுதிப்படுத்தவும்.


நமக்கு இப்பொழுது முழு வடிவம் தெரிந்தாலும் அதில் உண்மையில் இரண்டு path -க்கள் உள்ளன.அதை உங்களுக்கு காட்ட ctrl அழுத்திக்கொண்டு path -ல் ஏதேனும் ஒரு பகுதியை கிளிக் செய்தால் ,ஒரு பாதி anchor   பாயிண்ட்க்கள் மட்டுமே select  ஆகும்.அவற்றை இணைக்க combine  பட்டனை கிளிக் செய்ய வேண்டும்(path selection tool தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் ).

நாம் கைபேசியின் முழுமையான வடிவத்தை ஒரே path -ல் வரைந்துவிட்டோம்.

இந்த ஷேப் லேயருக்கு "base " என்று பெயர் மாற்றவும்.
மறக்காமல்  psd பைலாக save  செய்யவும்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
அடுத்த பகுதியில் தொடர்வோம்.
நன்றி,
அருண்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger