மின்னல் வேகத்தில் வந்தடைய Google லில் "photoshopkalvi" அல்லது "போட்டோஷாப்" என தேடுங்கள்

panels-பெனல்கள்

பெனல்கள்:
பெனல்கள் தான் போட்டோஷாபின் எண்ணற்ற வேலைகளை உள்ளடகியிருக்கும் user interface components. வேண்டிய பெனல்களை நாம் விண்டோ மெனுவிலிருந்து பெறலாம்.பெனல்களை நாம் நகர்த்தலாம் ,இனைக்கலாம்,சுருக்கலாம்,விரிக்கலாம்.பொதுவாக பெனல்கள் வலதுப்பக்கம் தான் இருக்கும்.மேற்குறிய செயல்களை பின் வருமாறு செய்யலாம்.
panel tab இன் காலியான இடத்தில் right கிளிக் செய்து அதில் உள்ள optionகளை உபயோகிக்கலாம்.அல்லது காலியான இடத்தில் செய்தால் பெனல் சுருங்கவும் விரியவும் செய்யலாம்.



முக்கியமான பெனல்களுக்கு shortcut  கி இருக்கும் அதனை அந்த பெனல்களுக்காண பெயரின் அருகில் இருப்பதை காணலாம்.ஒரு  பெனலை  மற்றொன்றுடன் group செய்ய அந்த பெனலை ட்ராக் செய்து மற்றொன்றின் மேல் விடவும் ..நீல நிற கோடு அதனை உறதி செய்ய உதவும்

பெனல்களை header view யிலும் பார்கலாம்...பின் வரும் படம் header view வில்  உள்ள பெனலை காட்டுகிறது.


சிகப்பு வட்டத்தில் உள்ள அம்புகுறி பொத்தானை கிளிக் செய்தால் அருகில் உள்ள header view வில் பெனலை காணலாம் .
tab keyஐ அழுத்தினால் அணைத்து பெனல்களும் மறைந்துவிடும்.மறுபடியும் tab key  ஐ அழுத்தினால் அணைத்து பெனல்களும் தோன்றும்.ஒவ்வொரு பெனலை பற்றி பின் வரும் நாட்களில் பார்கலாம்.



photoshop பயனர் இடைமுகம்(user interface)

ஒரு மென்பொருளை கற்பதற்கு முன் அதன் பயனர் இடைமுகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்..போட்டோஷாபிற்கு புதியவரா நீங்கள் !!!

கீழ்க்கண்ட படத்தை பாருங்கள் ..(new tab ல பாருங்க )



1->menu bar
2->options bar(tool ஐ  பொருத்து மாறும்)
3->tools மெனு(எல்லா tools இருக்கும் இடம் )
4->workspace bar(நம்  இடைமுகத்தை மற்றும் மெனு )
5->panels(panels photoshopla நிறைய இருக்கு)
6->canvas(நாம் வேலை செய்யும் இடம் )
7->application பார்( துணை மென்பொருட்கள் )

போட்டோஷாப் installation

போட்டோஷாப் installation:
  • முதலில் போட்டோஷாபை பதிவிறக்கம் செய்யுங்கள் (photoshop cs5)(http://torrentz.eu/search?f=photoshop+cs5+extended)
  •  பின் பதிவிறக்கமான folderஐ open செய்யவும்,பின் setup.exe ஐ open செய்யவும்.
  •   சீரியல் நம்பரை enter செய்ததும்,install  பொத்தானை கிளிக் செய்யவும்.


resolution

ரேசல்யுஷன் [resolution]-இந்த வார்த்தையை scanner,printer,photos க்களில் பெரிதும் பயன்படுத்துகின்றோம் ..ஆனால் ரேசல்யுஷன் என்றால் என்ன ?
உண்மையில் பிக்ஸெல் க்கு அளவு இல்லை.ரேசல்யுஷன் தான் பிக்சளின் அளவை நிர்ணயுகின்றது. ரேசல்யுஷன் என்பது ஒரு scale (ppi,ppcm) ..எவ்வளவு பிக்ஸெல் ஒரு குறிப்பிட்ட நீளத்தில் இருக்கிறது என்பதை காட்டும்.உதாரணமாக  72 pixels per inch ஒரு இன்ச்சில் 72 பிக்ஸெல் இருப்பதை காட்டுகின்றது. எனவே ஒரு பிக்ஸெல் 1/72 இன்ச் நீளமானது.



72 ppi உள்ள ஒரு படத்தை 50% விதமாக குறைக்கும் போது 144ppi ஆக மாறும் ..படம் மிகவும் தெளிவாக தெரியும்.அதையே 300% விதமாக உயர்த்தும் போது 24ppi ஆக மாறும். படம்  தெளிவாக தெரியாது .

பட பயன்முறை [Image Mode]

பட பயன்முறை என்பது நாம் எவ்வளவு நிறங்களை பயன்படுத்துகின்றோம் என்பதை நிர்ணயுக்கின்றது..பொதுவாக நாம் இரு பட பயன்முறைகளை பயன்படுத்துகின்றோம்..
  • RGB
  • CMYK (cyan,magenta,yellow,keyline[black])


 RGB பயனமுறையில் மொத்தம் 3 சேனல் இருக்கின்றது..R சேனல்,G சேனல்,B சேனல்..ஒவ்வொரு சேனலிற்க்கும் குறைந்தது  8 bit தேவை ..
CMYK பயனமுறையில் மொத்தம் 4 சேனல் இருக்கின்றது..C சேனல்,M சேனல்,Y சேனல்,K சேனல்..

இரும ஆழம் [பிட் depth]

படங்களின் இரும ஆழம் [பிட் depth] என்பது அந்த படத்தில் எத்தனை நிறங்கள் இருக்கலாம் என்பதை தெரிவிக்கின்றது.
1 bit படத்தில் இரு வண்ணமே இருக்கும் [கருப்பு( 0 ) மற்றும் வெள்ளை( 1 )]
2  bit படத்தில் 4 வண்ணமே இருக்கும்  [கருப்பு( 00 ),வெள்ளை( 11 ),மற்றும் இரு சாம்பல் நிறங்கள் ]
8  bit படத்தில் மொத்தம்  256 நிறங்கள் இருக்கும் ( வெள்ளையிலிருந்து கருப்பு வரை  )..உதாரணம் கருப்பு வெள்ளை போட்டோக்கள்.
24 bit படத்தில் முழு வண்ண படத்தை RGB யில் காட்டலாம்.
CMYK mode ல்அதற்கு 32 பிட் தேவை.
நாம் எடுக்கும் படங்கள் RGB mode லும் ,அச்சுக்குகந்த படங்கள் CMYK mode ல் பயன்படுத்துகின்றோம்

பிக்சல் மற்றும் திசையன் வரைகலை[pixel and vector based images]

 பிக்சல்
பிக்சல் என்பது  படத்தின் அடிப்படை கூறுகள்..இவை மிக சிறிய அளவில் இருக்கும்.பிக்சல் அனைத்தும் இருபரிமாண கட்ட அமைப்பில் சீரான புள்ளிகளை அல்லது சதுரங்களை கொண்டும் அமையபெற்றிருக்கும்.
picture elements =pixel
ஒரு படத்தின்   தெளிவும் அளவும் அதன் பிக்சல் எண்ணிக்கை பொறுத்தே அமையும் .புகைப்பட கருவிகள் ,scanner,video பதிவாகும் படங்கள் இந்த வகையே.

பிக்சல் படங்கள் சூம் செய்தால் பிக்சலின் உள்கட்டமைப்பு தெரியும்.

photoshop,ms paint போன்ற மென்பொருட்கள் இந்த வகையான படங்களை ஏடிட் செய்ய உதவும்.

 திசையன் வரைகலை [வெக்டர் ]:
வெக்டர் கிராபிக்ஸ் (திசையன் வரைகலை) என்பது கணினி வரைகலைகளில் பிம்பங்களைப் குறிப்பதற்காக கணித சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் புள்ளிகள், வரிகள், வளைவுகள் மற்றும் வடிவங்கள் அல்லது பல்கோணம் போன்ற வடிவியல்சார்ந்த முதன்மைப் பயன்பாடாகும். எனவே இவை எவ்வளவு சூம் செய்தாலும் தெளிவாக தெரியும்.
corel draw,adobe illustrator போன்ற மென்பொருட்கள் இந்த வகையான படங்களை ஏடிட் செய்ய உதவும்..
வெக்டர் அச்சுக்கு ஏற்றது என்றாலும்  பிக்சல் படங்களே நாம் பெரிதும் பயன்படுத்துகின்றோம்.இவற்றை தேர்ந்தெடுப்பது நமது உபயோகித்ததை பொறுத்தே உள்ளது.




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger